செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் நத்தம் நேரு குறுக்கு தெரு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரத்தில் சேறும், சகதியுமாக மாறும் சாலையில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. வாகனத்தில் செல்பவர்களின் நிலைமை இன்னும் மோசம். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டுகிறோம்.