காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள 4 ரோடு (கோவூர், குன்றத்தூர் மற்றும் தாம்பரம்) செல்லும் சாலைகளை இணைக்கும் பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. ஆனால் இந்த போக்குவரத்து சிக்னலானது பழுதடைந்து சரி செய்யப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். எனவே போக்குவரத்து துறை கவனித்து பழுதடைந்த சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.