சேறும் சகதியுமான சாலை

Update: 2022-09-16 14:37 GMT

காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் காந்தி சாலையையும் விளக்கொளி பெருமாள் கோவில் சாலையையும் இணைக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த குழாயிலிருந்து தண்ணீர் வளியேறி சாலை முழுவதும் பரவி அந்த இடமே சேறும் சகதியுமாக காட்சி தருகிறது. இதனால் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். பிரச்சினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்