காஞ்சீபுரம் பஸ் நிலையத்தின் உள்ளே இருக்கும் சுற்றுலா தகவல் மையம் பல மாதங்களாக மூடிய நிலையிலேயே உள்ளது. பஸ் நிலையத்தில் தகவல் கேட்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்லும் சூழல் அமைகிறது. எனவே மூடிய நிலையில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்தை திறப்பதற்கும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் நடவடிக்கை தேவை.