சென்னை அடையாறு, இந்திரா நகர் 11-வது சந்து பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பணி முடிவைடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் மழைநீர் வடிகால்வாய் வருமா? வராதா? என குழப்பத்தில் உள்ளனர். எனவே கிடப்பில் போடப்பட்ட வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.