திருவள்ளூர் வழியாக ஏராளமான விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. பூந்தமல்லி, ஆவடி போன்ற முக்கியமான பல பகுதிகள் திருவள்ளூரில் உள்ளன. ஆனால் முக்கியமான ரெயில்கள் எதுவும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ரெயில் ஏற எழும்பூர் அல்லது தாம்பரத்திற்கு தான் செல்ல வேண்டியுள்ளது. திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்பதற்கு வழி செய்தால் பலருக்கும் அது பயனுள்ளடதாக இருக்கும்.