துர்நாற்றத்தால் அவதி

Update: 2022-09-15 15:30 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ராஜாஜி காய்கறி சந்தையில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் வியாபாரிகளும், பொது மக்களும் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.துப்புரவு பணியாளர்களிடம் சீரான முறையில் குப்பைகளை அகற்ற எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு சந்தையில் கழிவு நீர் தேங்கி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்