காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர் தெரசாபுரத்தில் சாலை அமைப்பதற்காக மண் தோண்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கப்படாமல் தோண்டிய இடத்தில் மண்ணை நிரப்பிவிட்டு சென்றனர். தற்போது மீண்டும் சாலை அமைப்பதற்காக மண்ணை தோண்டி நிலையில் இன்னும் அமைக்கவில்லை. மழை காலங்களில் மக்கள் வெளியே சென்றால் சேற்றில சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீக்கிரம் அமைத்திட பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.