செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அருகே, கானத்துார் கிராமம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.