செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலிருந்து ஊரப்பாக்கம் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையானது குண்டும் குழியுமாக அபாயகரமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவஙகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை பழுது பார்க்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.