திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளின் 1000 மக்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் சீரான குடிநீர் வசதி இல்லை, ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு, கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து காணப்படுகிறது. மேற்கூறிய பிரச்சினைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.