சென்னை புத்தகரம் புத்துக்கோவில் அருகே உள்ள ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வீதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் பெண்கள் நடந்து செல்லும்போது நாய்கள் துரத்துவதால் பெண்கள் கடைவீதிக்கு செல்வதற்கு கூட தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாய்கள் தொல்லைக்கு நிர்ந்தர தீர்வு காணப்படுமா?