நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-13 15:04 GMT

பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் கேஸ் ஏஜென்சியில் அப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். சிலிண்டர் டெலிவரி செய்வோர் சிலிண்டரின் நிர்ணயித்த விலையவிட கூடுதலாக ரூபாய் 50 கேட்கிறார்கள். அப்படி கூடுதல் பணம் கொடுக்காவிட்டால் சிலின்டர் டெலிவரியை தாமதப்படுத்துகின்றனர். இதனால் குடும்பத்தலைவிகள் சமையல் செய்ய சிரமப்படுகிறார்கள். கேஸ் ஏஜென்சி அதிகாரிகள் கூடுதல் பணம் பெறுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்