திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன மண்டலி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலர் வராத காரணத்தினால் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெற அவதியுற்று வருகிறார்கள். எனவே கிராம நிர்வாக அலுவலர் வருகை புரிந்து அலுவலகத்தை தினமும் திறந்து பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்.