சென்னை வடபெரும்பாக்கம் மாதவரம்-செங்குன்றம் சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கா கூட்டுறவு நகர் பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. மழை காலம் நெருங்கி வருவதால் விபத்துக்கள் ஏற்படும் முன்பு மின் இணப்பு பெட்டியை சரி செய்ய வேண்டுகிறோம்.