அயப்பாக்கத்தில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள், மேலும் அங்கே உள்ள பொருட்களை களவாடுவதும் உடைப்பதுமாக இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.