திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் கிராமம் நெடுஞ்சாலையில்(B20 புஞ்சைவாக்கம் காவல் நிலையம்) என கட்டிடத்தில் எழுதி வைத்து காவல் நிலையம் காணப்படுகிறது. ஆனால் இந்த கட்டிடம் பூட்டிய நிலையிலே உள்ளது.இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் காவல் நிலையம் என கருதி புகார் அளிக்க வரும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அகரம் கிராமத்தில் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.