காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கொவில் தெரு வழியாக மந்தி அம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்கா உள்ளது. இந்த சிறுவர் பூங்காவை மக்கள் நடைபயிற்சி செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பூங்காவில் உள்ள கழிப்பறை குப்பைகளை நிறைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே பூங்காவிலுள்ள கழிப்பறையை பராமரித்து தண்ணீர் வசதியை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.