காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பால் நல்லூர் கிராமத்தில் பால விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள சாலையில் மணல் மற்றும் ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிகள் சாலையிலும் சிதறி உள்ளதால், இரவு நேரங்கலில் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் சறுக்கி கீழே விழுந்துவிடுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி சாலையில் இருக்கும் இடையூறுகளை சரி செய்ய வேண்டும்.