சென்னையை அடுத்த மகாபலிபுரம்-திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை உடனே பழைய முறைபடி இயக்க போக்குவரத்துத்துறை முன்வர வேண்டும்.