காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சோமங்கலம் பகுதியிலுள்ள மின்கம்பம் பழுதடைந்து இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் பழுதடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.