திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் உலாவுகின்றன. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை விரட்டுவதும், துரத்தி சென்று அவர்களை கடிக்கவும் முயல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலர் காயமடைந்துள்ளனர். தெரு நாய்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.