திருவள்ளூர் மாவட்ட பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்களுக்கு வசதியாக தாய்மார்கள் பால் ஊட்டும் அறை திறக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையயானது முறையான பராமரிப்பு இல்லாமல் பூட்டிய நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக் தாய்மார்கள் பாலூட்டும் அறை மீண்டும் பயன்பாட்டுக்கி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்களும், தாய்மார்களும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.