திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில் பதாகை சுவாமி நகர் முதல் தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்துள்ளது. என்று விழுமோ என்று அச்சப்படும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தெரு ஓரத்தில் இருக்கும் மின் கம்பம் என்பதால் சாலைவாசிகளும் பயத்தோடு பயணம் மேற்கொள்கிறார்கள். மக்களின் அச்சம் போக்க மின்சார வாரியம் வழி செய்யுமா?