திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த மருத்துவமனை முன்பு இருந்த பயணிகள் பஸ் நிறுத்தம் இடித்து அகற்றப்பட்டது. இந்தநிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் பஸ் நிறுத்தம் இல்லாமல் வெயிலில் நிற்கும் சூழல் அமைகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?