திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் எதிரே உயர் கோபுர மின்விளக்கு ஒன்று உள்ளது. இது கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் வரும் பெண் பயணிகள் அச்சப்படும் சூழ்நிலை அமைகிறது. பஸ் நிலையமானது இருள் நிறைந்து காணப்படுவதால் அந்த பகுதியிலுள்ள கால் நடைகள் பஸ்சில் மோதும் சம்பவங்களும் நிகழ்கின்றன. பஸ் நிலையத்தில் மீண்டும் வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?