ஈரோடு லக்காபுரம் புதுவலசு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை அருகே நீண்ட தூரத்துக்கு குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் காற்று வீசும்போது அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசிகள் விழுகின்றன. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.