திருவள்ளூர் மாவட்டம் காக்களூர், மாருதி நியூ டவுன் பகுதியில் ரேஷன் கடை பின்புறம் அமைந்துள்ள பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது. ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் உடைந்தும் துருப்பிடித்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பூங்கா புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?