திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக போலீசார் சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகார் பெட்டியை போலீசார் தினந்தோறும் திறந்து அதில் ஏதேனும் புகார் வந்துள்ளதா என பார்க்காமல் விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக இந்த புகார் பெட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே இந்த புகார் பெட்டியை போலீசார் தினந்தோறும் திறந்து அதில் பொது மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் இருந்தால் நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.