சென்னை மடிப்பாக்கம் உள்ளகரம் எம்.ஜி.ஆர். 2-வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. பலமாக காற்றடிக்கும் போது இந்த தெருவில் வாகனத்தில் செல்பவர்கள் மீது வயர்கள் மோதும் நிலையும் ஏற்படுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து தாழ்வாக தொங்கும் மின்சார கேபிளை சரி செய்ய வேண்டுகிறோம்.