திருவள்ளூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் எல்.ஐ.சி பின்புறம் உள்ள சாலை சேறும் சகதியமாக காணப்படுகிறது. இந்த சாலையானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதே நிலையில் தான் உள்ளது. முதியோர்கள் மற்றும் பெண்கள் இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலை வசதிக்காக அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். காத்திருப்புக்கு பயன் கிடைக்குமா?