சென்னை திருவான்மியூர் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கிருந்த புறநகர் பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. மேலும் இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பஸ்கள் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.