புகார் எதிரொலி

Update: 2026-04-26 13:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரிய களக்காட்டூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலககட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சேதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்