செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மலை கோவில் உலக பிரசித்தி பெற்ற பழமையான கோவில். இந்த கோவிலில் உள்ள சங்கு தீர்த்தத்தை கடந்த மாதம் தூர்வாரி, தீர்த்தத்தில் படர்ந்திருந்த பாசி செடிகள் அகற்றப்பட்டு கரை ஓரத்தில் போடப்பட்டது. கரையில் போடப்பட்ட பாசி செடிகள் இன்னும் அகற்றப்படாமலே உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாசி செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.