திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள வேலம்மாள் நியூ டவுன் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலை வசதி இல்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 தெருக்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது இன்னும் சாலை போட்டபாடில்லை. மேலும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. தாமதமின்றி சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?