சென்னை நேரு நகர் பஜனை கோவில் தெருவில், வீட்டுக்கு அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. வீடுகளின் அருகே குழந்தைகள் விளையாடும் பகுதி இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. மேலும் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின் கசிவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.