கோபி அரசு மருத்துவமனை ரோட்டில் வாய்க்கால் ரோடு செல்லும் ரோடு வருகிறது. அங்குள்ள தனியார் மருத்துவமனை எதிரில் குடிநீர் குழாய் செல்கிறது. இதற்காக அங்கு சிறிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு உள்ளது. ஆனால் தொட்டிக்கு மூடி போடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாய் தொட்டியில் மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.