காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியிலுள்ள மாடம்பாக்கம் மாணிக்கம் நகர்(அபீஸ் ரமணி கார்டன் அருகே) உள்ள மின்சார கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின்சார வயர்கள் ஆபத்தான முறையில் கீழே தொங்கியபடி உள்ளது. இது மழைகாலம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாயந்த மின் கம்பத்தை சீர் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.