குப்பைதொட்டி அகற்றப்படுமா?

Update: 2022-08-31 13:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி , அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள தோப்பு தெரு பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி அருகே இருக்கும் இந்த குப்பை தொட்டியால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் இதை கடந்து செல்லும்போது மூக்கை பொத்திக்கொண்டு தான் சென்று வருகிறார்கள். எனவே பள்ளி அருகே இருக்கும் குப்பை தொட்டியை அகற்றி வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்