திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு ஏரி அருகே மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும் நடைபாதையை சுற்றி நடப்பட்ட மரக்கன்றுகள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை. இதனால் நடைபாதையை செடி கொடிகள் ஆக்கிரமித்து நடைபாதையில் நடப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மழை காலங்களில் விஷ ஜந்துக்கள் நடைபாதையில் நடந்த வண்ணம் இருக்கிறது. நடைபாதையை பராமரிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.