திருவள்ளுவர் மாவட்டம் மணலி புது நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலே உள்ளது. இரவு நேரத்தில் கால்நடைகளோ, மனிதர்களோ பள்ளத்தில் விழுந்திட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளத்தை மூட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.