காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்த தெருவில் அதிகமான மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு சென்று விடுவதால் அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது பல சிரமங்களை ஏற்படுத்துகிறது. பொது மக்களின் நலன் கருதி மின்சார வாரியம் ஆய்வு செய்து மின் தடைக்கு நிரந்தர தீர்வு வழங்குமா?