திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆற்காடு குப்பம் மற்றும் இலட்சுமாபுரம் கிராம பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் இருக்கும் உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த ஓராண்டாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து எரியாத விளக்குகள் மீண்டும் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.