திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள சாலையானது கால்நடைகள் ஓய்வெடுக்கும் சாலையாக மாறி வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அந்த அளவுக்கு கால்நடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. கால்நடைகளால் விபத்து ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.