சென்னை மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் மின்சார கம்பத்தின் வயர்கள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாகவே இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.