வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கதண்டுகள்

Update: 2022-08-29 13:09 GMT


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அகனி, மன்னன் கோவில், வள்ளுவக்குடி, ஏனாக்குடி, கொண்டல், அகர எலத்தூர், பனங்காட்டான்குடி, நிம்மேலி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ராமாபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு பனை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளன. இந்த கதண்டுகள் பறந்து வந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடித்து வருகின்றன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்ல வேண்டிய நிைல உள்ளது. எனவே, இந்த கதண்டுகளை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பனங்காட்டான்குடி

மேலும் செய்திகள்