திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நடுத்தகை பகுதியில் உள்ள திலீபன் நகரில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவு நேர மின்வெட்டால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி தூக்கத்தை கெடுக்கிறது. எனவே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நடுத்தகை