திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பத்தின் உச்சியில் மின்சார வயர்கள் இருக்கும் பகுதியில் மரம் வளர்ந்து மின்கம்பத்தை சூழ்ந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து விலக நடவடிக்கை எடுக்கப்படுமா?