திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் வள்ளலார் தெருவில் உள்ள மின் கம்பம் மோசமான நிலையில் காட்சி தருகிறது. மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. மின்கம்பம் முழுவதுமாக உடைந்து கீழே விழும் முன்பு மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.