திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரக்கோணம் சாலையில் மணல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்பாய் மூடாமல் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கண்ணீல் மணல் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மணல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்பாய் போட்டு மணலை எடுத்து செல்ல வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.